ஆறு, குளம், கிணறு, பாத்ரூம் என எங்கு குளித்தாலும் சரி தான்! அங்கே நதி தேவதைகளை அழைக்கும் வகையில் ஒரு எளிய ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதீ நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சன்னிதிம் குரு
பொருள்: கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி நதி தேவதைகளே! நான் நீராடும் இந்த ஜலத்தில் எழுந்தருளுங்கள்! இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் குளிப்பவர்களுக்கு, பாலைவனத்துக்கே சென்றாலும் தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்கும் என்பர்.