நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களே இப்பிரபஞ்சமாக இருக்கிறது. இதனை இயக்கும் பேராற்றலே பிரபஞ்சசக்தி. அது அரூப வடிவில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதனையே தாயுமானவர், அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி என்று பாடுகிறார்.