பதிவு செய்த நாள்
26
செப்
2015
11:09
ராசிபுரம்: பட்டத்துளசியம்மன் கோவில், மண்டல பூஜையில், அம்மன் திருமஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், சி.பி., கண்ணையாத்தெருவில், பட்ட துளசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மிகுந்த பொருட்செலவில் கட்டுமான பணிகள் முடிவடைந்தையடுத்து, கோவில் கும்பாபிஷேக விழா சமீபத்தில் நடந்தது. அதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கியது. தினமும் காலை, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடக்கிறது. நேற்றுமுன்தினம் நடந்த கட்டளைதாரர் நிகழ்ச்சியில், அம்மனுக்கு எண்ணெய், சீகக்காய், பால், தயிர், இளநீர், திருமஞ்சள், சிகப்பு உள்ளிட்ட அபிஷேங்கள் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.