Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்தியமங்கலம் கோவிலில் ... பெங்களூரு விநாயகர் சிலைகள் ஏரிகளில் கரைப்பு! பெங்களூரு விநாயகர் சிலைகள் ஏரிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் கோவில் பாதுகாப்பு: ஆளில்லா குட்டி விமானம் மூலம் சோதனை ஓட்டம்!
எழுத்தின் அளவு:
அண்ணாமலையார் கோவில் பாதுகாப்பு: ஆளில்லா குட்டி விமானம் மூலம் சோதனை ஓட்டம்!

பதிவு செய்த நாள்

28 செப்
2015
10:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழா பாதுகாப்பு பணி ஆய்வில், ஆளில்லா குட்டி விமானம் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் நவம்பர், 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 25ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவர். பக்தர்களுக்கு, அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவிழாக்கள் மற்றும் மிகப்பெரிய பொதுக்கூட்டம் போன்றவற்றின், பாதுகாப்பை கண்காணிக்க தமிழக போலீஸ் துறையின் கமாண்டோ பிரிவு, நான்கு ஆளில்லா குட்டி விமானம் வாங்க முடிவு செய்து அதற்காக அரசு, ரூ.27லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

தற்போது, இந்த ஆளில்லா குட்டி விமானத்தை, அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து கமாண்டோ பிரிவுக்கு வழங்கப்பட உள்ளது. ஆளில்லா விமானம், திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோவிலில் நேற்று கமாண்டோ போலீஸாரும், சென்னை அண்ணா பல்கலை குழுவினரும் ஆளில்லாத விமான சோதனை ஓட்டம் நடத்தினர். 360 டிகிரியில் சுழலும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஆளில்லா குட்டி விமானம் அதிக பட்சம், 500 அடி உயரமும், 25 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் பறக்கும் திறன் கொண்டது. 30 நிமிடம் வரை இயங்கும் திறன் கொண்ட பேட்டரி விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, அரை மணி நேரத்திற்கு, ஒரு முறை விமானத்தை தரையிறக்கி பேட்டரியை மாற்றி பறக்க விட்டனர். சோதனை ஓட்டத்துக்காக நேற்று அதிகபட்சம், 200 அடி உயரம் வரை பறக்க விடப்பட்டது. இந்த சோதணை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது என, பணியில் ஈடுபட்ட தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்தனர். கார்த்திகை தீப திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பவுர்ணமி கிரிவலத்தின்போதும், ஆளில்லா விமானத்தின் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar