ஆர்.எஸ்.மங்கலம்: செங்குடி புனித மிக்கேல் அதிதூதர் சர்ச் விழா கடந்த 20ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருப்பலி, இரவு திருவிழா தேர்பவனி நடக்கிறது. நாளை காலை திருவிழா திருப்பலி, மாலை தேர்பவனியை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை செங்குடி கிராமத்தினர் செய்துள்ளனர்.