வடமதுரை பெருமாள் கோயில் வளாகத்தில் ரூ.10 லட்சம் செலவில் நிழற்கூரை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2015 11:09
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வளாகத்தினுள் ரூ.10 லட்சத்தில் நிழற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 13 நாட்கள் நடக்கும் திருவிழாவிற்காக கோயில் வளாகம், சன்னதி வீதியில் தென்னம்கீற்றால் நிழற்கூரை அமைக்கப்படும். விபத்துக்களை தவிர்க்க தென்னம்கீற்று கூரைகளை தவிர்க்க அரசு வலியுறுத்தியுள்ளது. திருவிழாவிற்காக இரும்பு தகரத்திலான தற்காலிக நிழற்கூரை அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் என கணக்கிடப்பட்டது. இதனால் இங்கு நிரந்தரமாக இரும்பு கட்டமைப்பிலான கூடாரத்தை அமைத்து, "கேல்வால்ம் சீட் எனப்படும் குளிர் தன்மை தரும் நிழற்கூரையை அமைக்க உள்ளூர் பிரமுகர்கள் முயற்சி எடுத்தனர். இதன் பலனாக ஊர்மக்கள் பங்களிப்புடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிழற்கூரை பணி துவங்கியது. இரும்பு தூண்களை நிறுவுவதற்குரிய காங்கீரிட் கட்டுமான பணி சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து தயார் நிலையில் உள்ளன. திண்டுக்கல் நிறுவனம் ஒன்றில் இரும்பு குழாயிலான தளவாடப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, நேற்று கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டன. நிழற்கூரை அமைப்பாளர்கள் கூறுகையில்,"முதல் கட்டமாக கோயில் வளாகத்தில், பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதிகளின் முகப்பு பகுதியில் 5000 சதுர அடிக்கு நிழற்கூரை அமைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக சன்னதி வீதியிலும் நிழற்கூறை அமைக்க முயற்சிப்போம் என்றனர்.