பதிவு செய்த நாள்
29
செப்
2015
11:09
திருப்பதி: ஐதராபாத்தில், இந்தாண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், 5,000 கோடி ரூபாய்க்கு, விநாயகர் சிலைகள் வியாபாரம் நடைபெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, 17ம் தேதி, நாடு முழுவதும், மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு உள்ள சிறப்பு, சிலைகளை கடலில் கரைக்கும் தினத்திற்கும் உண்டு.ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், நேற்று முன்தினம் முதல், விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.கடந்த 2014ல், ஐதராபாத்தில் மட்டும், 70 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. இந்தாண்டு, 5,000 கோடி ரூபாய் செலவில், ஐதராபாத் முழுவதுமாக, ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. ஐதராபாத்தில், 153 குடும்பங்கள், பாரம்பரியமாக விநாயகர் சிலை வடிவமைப்பில் ஈடுபட்டு உள்ளன. இங்கிருந்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிராவிற்கு, விநாயகர் சிலைகள் அனுப்பப்படுகின்றன.இந்தாண்டில், 5,000 கோடி ரூபாய்க்கு சிலைகள் விற்கப்பட்ட தகவலை, ஐதராபாத் பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வும் உறுதிபடுத்தியுள்ளது.