மாரியம்மன், அய்யனார் கோயில்களில் புரட்டாசி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2015 12:10
செக்கானுாரணி: செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கண்ணனுாரில் மாரியம்மன், அய்யனார் கோயில்களில் புரட்டாசி பொங்கல் உற்சவம் 2 நாட்களுக்கு நடந்தன. முதல் நாள் மாரியம்மனுக்கு பால் குடம் எடுத்தும், மாவிளக்கு ஏற்றியும், அங்க பிரதட்சணம் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். பெண்கள் மஞ்சள் நீர்க்குடம் எடுத்து சென்று, அம்மனை நீராட்டினர். பக்தர்கள் அலகுகள் குத்தியும், தீச்சட்டி, ஆயிரம் கண் பானைகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. 2வது நாள் அய்யனார் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டது.