செக்கானுாரணி: செக்கானுாரணி அருகேவுள்ள ஆ.கொக்குளம் அம்மச்சியம்மன் கோயிலில், புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. ஏராளமான பெண்கள் மஞ்சள் நீர் குடம் எடுத்து சென்று அம்மனை நீராட்டினர். பின் பொங்கல் வைக்கப்பட்டது. அச்சு வெல்லம், வாழைப்பழங்களை வீசி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. ஏற்பாடுகளை ஆ.கொக்குளம் ஆறுகரை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.