Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக பணி ... திருப்பதி ஸ்ரீவாரி சேவார்த்திகளுக்கு பயிற்சி! திருப்பதி ஸ்ரீவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18 படிகளில் அக்.17 -ல் கும்பாபிஷேகம் சபரிமலை நடை முன்னதாக திறப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
18 படிகளில் அக்.17 -ல் கும்பாபிஷேகம் சபரிமலை நடை முன்னதாக திறப்பு!

பதிவு செய்த நாள்

03 அக்
2015
11:10

சபரிமலை: புதிதாக ஐம்பொன் தகடுகள் பதிக்கப்பட்ட 18 படிகளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஐப்பசி மாத பூஜையின் போது சபரிமலை நடை ஒரு நாள் முன்னதாக 16-ம் தேதி மாலை திறக்கிறது. 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

சபரிமலை புனித பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பது 18 படிகள். 18 மலை தேவதைகளை குடியிருத்தி கட்டப்பட்ட இந்த படிகளில் விரதமிருந்து இருமுடி கட்டு ஏந்தி வரும் பக்தர்கள் மட்டுமே ஏறமுடியும். காலத்தால் பழமையாகி விட்ட இந்த படிகளில் தற்போது புதிதாக ஐம்பொன் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 15-ம் தேதிக்குள் முடிவடைந்து விடும்.ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்க வேண்டும். புதிய படிகளில் பக்தர்கள் ஏறுவதற்கு முன் பூஜைகள் நடத்தி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்கு வசதியாக ஒரு நாள் முன்னதாக 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கிறது.

அன்று மாலை தந்திரி மகேஷ்மோகனரரு தலைமையில் சுத்தி கலச பூஜைகள் நடைபெறும். 17-ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறும். 16-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறந்தாலும், 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு பின்னர்தான் பக்தர்கள் 18-ம் படி வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.16-ம் தேதி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேல்சாந்தி தேர்வு: அடுத்த கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்தி தேர்வு 18-ம் தேதி காலை எட்டு மணிக்கு சன்னிதானத்தில் நடக்கிறது. ஐப்பசி மாத பூஜைகள் 22-ம் தேதி வரை நடைபெறும். அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar