கீழக்கரை: உத்திரகோசமங்கை பிரம்ம தீர்த்தக்குளம் புராண சிறப்புடையது. இக்குளத்தில் சிவபெருமானிடம் சாபம் விமோசனம் பெற்ற பிரம்மன், நீராடி பாவங்களை போக்கியதால் பிரம்ம தீர்த்தக்குளம் என்று கூறப்படுகிறது. இந்த குளம் மங்களநாதசுவாமி கோயிலுக்கு முன் 2 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த குளத்தின் வடக்குப்பகுதி தடுப்புச்சுவர் சேதமடைந்து கருவேல மரங்கள் முளைத்திருந்தன. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமாரின் உத்தரவில் புண்ணிய ஸ்தலங்களுக்கான சிறப்பு நிதித் திட்டத்தில் ரூ.22 லட்சத்தில் குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது.