Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி ... திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கோலாகலம்! திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி அகத்தீஸ்வரர் கோவிலில் 64 பைரவர்களுக்கு யாகம்!
எழுத்தின் அளவு:
திருத்தணி அகத்தீஸ்வரர் கோவிலில் 64 பைரவர்களுக்கு யாகம்!

பதிவு செய்த நாள்

06 அக்
2015
10:10

திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவி லில், 64 பைரவர்களுக்கு, தனித்தனியாக யாகசாலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஏழு ஆண்டுகளாக, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 64 பைரவர்களுக்கு, தனித்தனியாக யாகசாலைகள் அமைத்து, சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.

இந்தாண்டிற்காக, பைரவர்கள் சிறப்பு மகா யாக விழா, கடந்த 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில், 64 பைரவர்களுக்கும், தனித்தனியாக யாகசாலை மற்றும் கலசங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 3ம் தேதி, சாந்தி ஹோமம், திசா ஹோமம், அஸ்தர ஹோமம் மற்றும் மூலவர் அம்மனுக்கு நவகலச பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், ஸ்ரீருத்ர த்ரிசதி ஹோமம், ரஷா பந்தனம் மற்றும் அகத்தீஸ்வரருக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, நான்கு கால யாகசாலை பூஜைகள், வடுகபைரவர் பூஜை நடந்தன. பின், 64 பைரவர்களுக்கும், ஸ்ரீ மகா வடுக யாகசாலை பூஜைகளை, 64 சிவச்சாரியார்கள் நடத்தினர். அனைத்து கலசங்களும் ஊர்வலமாக புறப்பட்டு, மூலவர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் காமாட்சி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, கேரள வாத்தியங்களுடன் பைரவர்கள் மற்றும் உற்சவர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சென்னை, திருவள்ளூர் வேலுார் ஆகிய மாவட்டங்களில் இருந்த வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar