பதிவு செய்த நாள்
08
அக்
2015
11:10
திருப்புத்தூர்:திருப்புத்தூர் கோயில்களில் நவராத்திரி விழா அக்.13ல் துவங்குகிறது. திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அக்.13ல் சிவகாமிஅம்மன் அலங்காரத்துடன் நவராத்திரி விழா துவங்குகிறது. தொடர்ந்து ராஜஅலங்காரம், மீனாட்சி அம்மன், தபஸ், சிவபூஜை, திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தல்,காமாட்சி அம்மன், மகிசா”ரமர்த்தினி,சரஸ்வதி ஆகிய அலங்காரங்களில் விழா நடைபெறும். அக்.22ல் மாலை 6 மணிக்கு அம்பாள் அம்பு எய்தல், திருவீதி உலா நடைபெறும். தினசரி இரவு 7.45 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
*பூமாயி அம்மன் கோயிலில் அக்.,13ல் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் விழா துவங்குகிறது. தினசரி காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையும் நடைபெறும்.தொடர்ந்து மீனாட்சி கல்யாணம்,தெட்சிணாமூர்த்தி, ஊஞ்சல்,பள்ளி கொண்ட பெருமாள்,சமயபுரத்தாள்,தந்தைக்கு மந்திரம்,மகிசா”ரமர்த்தினி, சிவபூஜை அலங்காரம் நடைபெறும். அக்.22ல் அம்மன் அம்பு எய்தல் இரவு 8 மணிக்கு நடைபெறும்.