பதிவு செய்த நாள்
08
அக்
2015
11:10
கடலுார்: கடலுாரில் உள்ள சங்கர பக்த ஜன சபாவில் திவ்யநாம சங்கீர்த்தனம் நடந்தது. கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்கர பக்த ஜன சபாவில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 80வது திருநட்சத்திர வைபவ ஜெயந்தியையொட்டியும், உலக நன்மை வேண்டியும் அனந்த நாராயண பாகவதர் குழுவினரால் சம்ப்ரதாய பஜனையும், திவ்யநாம சங்கீர்த்தனமும் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சபாவின் உப தலைவர் திருமலை, பொருளாளர் ராஜா, கமிட்டி உறுப்பினர்கள் ராஜி, மோகன், உமா, சுபாஷினி, பாலசுப்ரமணியன் செய்திருந்தனர்.