பதிவு செய்த நாள்
25
ஜூலை
2011
12:07
ஊட்டி : ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ் அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் 25ம் தேதி கிருத்திகை பூஜை, ஏழு ஹெத்தையம்மன், நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.காலை 10.00 மணிக்கு சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரக தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 10.30 மணிக்கு குருத்துக்குளி நன்மணி லட்சுமணன், கல்லக்கொரை முருகன் குழுவினரின் பஜனை, 12.00 மணிக்கு தஞ்சை அருளாளர் திருமுருகன் ஆனந்தசித்தரின் அருளுரை, 12.30 மணிக்கு ஆருகுச்சி ஓய்வு பெற்ற ஆசிரியர் பெள்ளன், கோவை கற்பகம் பல்கலை கழக பேராசிரியர் முத்துகிருஷ்ணன், மேற்கு நாடு சீமெ பார்பத்தி கிருஷ்ணன், கின்னகணிகே போஜன் ஆகியோர் பேசுகின்றனர். சிறப்பு விருந்தினராக எம்.பாலாடா பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் சத்தியநாராயணன் பங்கேற்கிறார். மதியம் 2.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்துள்ளார்.