பதிவு செய்த நாள்
25
ஜூலை
2011
12:07
ஊட்டி : வரும் செப்டம்பரில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை, குழு அமைத்து விமரிசையாக கொண்டாட, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. நீலகிரி மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம், ஊட்டியில் நடந்தது. காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். மும்பையில் 13 ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் பலியாக காரணமான பயங்கரவாதத்திற்கு மெத்தனம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும், வரும் செப்டம்பரில், விநாயகர் சதுர்த்தி விழாவை, நீலகிரி மாவட்டம் முழுக்க கொண்டாட முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், குன்னூர் நகரத் தலைவர் ஹரி, கார்த்தி, ஊட்டி நகர செயலாளர்கள் ராஜேந்திரன், விஜய், சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.