பொன்னேரி: திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வர கோவிலின் அமிர்தபுஷ்கரணி குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் கிராமத்தில், திருப்பாலீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில், அமிர்தபுஷ்கரணி என, அழைக்கப்படும் குளம் உள்ளது. இக்குளத்தின் படித்துறைகள் உடைந்தும், படிகளில் செடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர். எனவே, இக்குளத்தின் படித்துறைகளை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.