காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம்
முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இன்று அம்மன் மூகாம்பிகை அலங்காரத்திலும், நாளை லட்சுமி அலங்காரத்திலும்,
அதை தொடர்ந்த நாட்களில் மீனாட்சி, சக்தி, ஞானப்பால், சிவபூஜை, கரு
மாரியம்மன்,
சரஸ்வதி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 22-ம் தேதி
இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும்
இரவு 7 மணிக்கு அலங்கார தீபம் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி
சுமதா தலைமையில் செயல் அலுவலர் பாலாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து
வருகின்றனர்.