திண்டிவனம்: திண்டிவனம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டிவனம் ராஜாம்பேட்டை வீதியிலுள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், 20ம் ஆண்டு நவராத்திரி உற்சவ விழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினந்தோறும் அம்மனுக்கு இரவு 7 :00 மணிக்கு அபிஷேகமும், 7:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், சகஸ்ரநாம அர்ச்னையும், இரவு 8:00 மணியளவில் ஊஞ்சல் சேவையும், தீபாராதனையும் நடக்கின்றது. தொடர்ந்து வரும் 22ம் தேதி வரை நடக்க உள்ள நவராத்திரி உற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.