பதிவு செய்த நாள்
15
அக்
2015
12:10
செஞ்சி: வல்லத்தில் நான்கு கோவில்களுக்கு, மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.
செஞ்சி தாலுகா வல்லத்தில் கடந்த ஆக. 27ம் தேதி சித்தி விநாயகர், ஞானபுரிஸ்வரர், ஸ்ரீதேவி பார்வதி, நவக்கிரகங்கள், முத்துமாரியம்மன், கெங்கையம்மன், சப்தமாதாக்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராŒக்தி வழிபாட்டு மன்ற கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். பகல் 1:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு ஹோமம் நிறைவும், கலச நீரை ஊர்வலமாக எடுத்து சென்று மூலவர்களுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு அன்னதானமும், இரவு சாமி வீதியுலாவும் நடந்து. இதில் ஒன்றிய சேர்மன் அண்ணாதுரை, அறங்காவலர்கள் பாண்டுரங்கன், ராமலிங்கம், அண்ணாமலை, அருள், விழா குழுவினர் இளவழுதி, லட்சாதிபதி, முருகன், சேகர், காந்தி, ராமச்சந்திரன், கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.