பார்த்திபனூர் மீனாட்சி - சொக்கநாதர் கோயிலில் அக். 26 ல் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2015 12:10
பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனூர் மீனாட்சி சொக்க நாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் அக்.,26ல் நடக்கிறது.
மகாபாரத காலத்தில், அர்ச்சுனன்(பார்த்திபன்) வழிபாடு நடத்தியதால், இவ்வூர் பார்த்திபனூர் என பெயர் பெற்றுள்ளது. மதுரையில் சிவபெருமானின் திருவிளையாடலின் போது, நக்கீரரின் சாபம் நீங்க இங்கு வழிபாடு நடத்தியதாகவும் தலவரலாறு கூறுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான இக் கோயிலுக்கு சாட்சியாக, "மாவலிங்க மரம், "சங்கரன்குளம் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலில் இந்து அறநிலையத்துறையினர், பக்தர்கள் பங்களிப் புடன் திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகிறது. அக். 26 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகபூஜைகள் அக். 22 ல் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், விழா கமிட்டியினர், பக்தர்கள் செய்கின்றனர்.