விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2015 05:10
திருவாரூர்: தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவிளமல், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோயிலில்நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்காபரமேஸ்வரியாய், ராஜலக்ஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் அருள்மிகு மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சவுந்தரிய சவுபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை பெறலாம். 21.10.2015 புதன்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் நடைபெறுகிறது. படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம். 22.10.2015 வியாழக்கிழமை தசவித்தியா மஞ்சுளவாணி பாத தரிசனம் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
16.10.2015 (வெள்ளி)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம் 17.10.2015 (சனி)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம் 18.10.2015 (ஞாயிறு)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம் 19.10.2015 (திங்கள்)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம் 20.10.2015 (செவ்வாய்)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம் 21.10.2015 (புதன்)- காலை: 10.00 மணிக்கு- அம்பாளுக்கு மகா அபிஷேகம், மாலை: 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல் 22.10.2015 (வியாழன்)- காலை: 8.30 மணிக்கு- அம்பாளுக்கு மஹா அபிஷேகம் தசவித்தியா பாத தரிசனம் அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் குழந்தைகளுக்கு.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் குருக்கள் சந்திரசேகர சிவாச்சாரியார் செய்து வருகிறார். தொடர்புக்கு 9489479896, 9942881778