பதிவு செய்த நாள்
19
அக்
2015
11:10
பழநி:வன்னிகாசூரன் வதத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் சன்னதி நடை அக்.,22 பிற்பகல் ௨.30 மணி முதல் இரவு 11 மணி வரை சாத்தப்படும். பழநி கோயிலில் நவராத்திரி விழா அக்.,22வரை நடக்கிறது. அக்.,22 அன்று வன்னிகாசூரன் வதத்தை முன்னிட்டு, மலைக்கோயிலில் வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை, பிற்பகல் 1.30 மணிக்கே நடக்கும்.பூஜை முடிந்தவுடன் மலைக்கோயிலில் உள்ள பராசக்திவேல், பாதவிநாயகர் கோயில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். மாலை 5 மணிக்கு மேல், முத்துக்குமார சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்திவேல், கேடயத்தோடு கோதைமங்கலத்திற்கு புறப்படுவார். அங்கு கோதையீஸ்வரர் கோயில்முன் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழைமரம் மற்றும் வன்னிமரத்தில் அம்பு எய்து வன்னிகாசூரன் வதம் நடக்கும்.அதன்பின் முத்துகுமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலுக்கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கும் பின், அர்த்தஜாம பூஜை நடக்கும். அன்று (அக்.,22ல்) பிற்பகல் 2.30 முதல் இரவு 10.30 மணி வரை மலைக்கோயில் சன்னதி நடை சாத்தப்படும்.