திருச்சி: ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு இணையானது என, நம்பிக்கை உள்ளது. ஐப்பசி முதல் நாளன்று, திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையிலும்; இரண்டாவது வாரத்தில் கும்பகோணத்திலும்; ஐப்பசி கடைசி நாளில் மயிலாடுதுறையிலும், பக்தர்கள் காவிரியில் புனித நீராடுவர்.ஐப்பசி முதல் நாளான நேற்று, திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில், பசும்பொன் மயிலாம்பிகை- தாருகவனேஸ்வரர் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.