பதிவு செய்த நாள்
19
அக்
2015
11:10
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், அர்த்தஜாம பூஜையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் நேற்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக, ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகன் சபரீஷ் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை, கோவில் பொது தீட்சிதர்கள் வரவேற்றனர். துர்கா, இரவு, 10:00 மணிக்கு, கனகசபையில் நடந்த அர்த்தஜாம பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார்.