நெய் தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வம் பெருகும் கடன்கள் மறையும். நல்ல நெய்யில் தீபம் ஏற்றினால் எம பயம் விலகும். சுகம் உண்டாகும். இலுப்பை எண்ணையில் தீபம் ஏற்றுவது உடல் ஆரோக்கியத்தை தரும். வியாதிகள் விலகும். ஆமணக்கு எண்ணெயில் தீபமேற்றினால் மன சாந்தி உண்டாகும். விளக்கெண்ணெயில் தீபமேற்றினால் உறவுகள் பலப்படும். புகழ் உண்டாகும். மகாலட்சுமிக்கு பசு நெய்யும், ருத்ராதி தேவதைகளுக்கு இலுப்பை எண்ணெயும், துஷ்ட சக்திகள் விலக ஐந்து எண்ணெய் கூடிய தீபமும் ஏற்றினால் நல்லது.
வேப்ப எண்ணெய் தீபம் - கணவன் மனைவி உறவு நலமாகும். பசுநெய் தீபம் - கிரகதோஷம் விலகும். விளக்கெண்ணெய் தீபம் - குல தெய்வ அருள் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் தீபம் - மனத்தெளிவும் உறுதியும் வரும். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் - மூன்றையும் கலந்து ஏற்றினால் அதிக செல்வம் சேரும்.
விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் கலந்து தீபமேற்றினால் - மந்திர சித்தி பெறலாம்.
(கடலை எண்ணெயில் தீபம் ஏற்றுவதும், செயற்கையாக வண்ணம் ஏற்றிய எண்ணெயில் தீபம் ஏற்றுவதும், சுட வைத்த எண்ணெயில் தீபம் ஏற்றுவதும், தரையில் கொட்டிய எண்ணெயைக் கொண்டு தீபம் ஏற்றுவதும், அசுத்த பாத்திரத்தில் வைத்த எண்ணெயினால் தீபம் ஏற்றுவதும் தவிர்க்க வேண்டியவை இவை துன்பத்தையே தரும்)