வைணவர்கள் நெற்றியில் தினமும் நாமம் போடுவர். இரண்டு வெள்ளை கோடுகளும் நடுவில் சிவப்பு கோடும் அந்த நாமத்தில் இடம் பெற்று இருக்கும். இதில் வெள்ளை கோடுகள் திருமாலை குறிக்கும். நடுவில் இருக்கும் சிவப்பு லட்சுமியை குறிக்கும். நாமம் அணிவதால் அவர்கள் இருவரின் அருளும் நமக்குக் கிடைக்கும். லட்சுமி ஒரு போதும் திருமாலை பிரியமாட்டாள். அதனால் வெள்ளை கோடுகளுக்கு இடையே சிவப்பு செந்நிற கோட்டைப் போடுகிறோம்.