மதுரை: மதுரை தெற்கு மாசி வீதி பச்சரிசிக்கார மண்டபத்தில், கோல்கட்டா காளிக்கு நேற்று துர்க்கா பூஜை நடந்தது.மாசி வீதிகளில் வங்க மொழி பேசுவோர் உள்ளனர். தசராவை முன்னிட்டு துர்க்கா பூஜையை ஆண்டு தோறும் இவர்கள் நடத்துகின்றனர். காளிக்கு சிலை அமைத்து சிறப்பு பூஜைகளை செய்கின்றனர். ஆயுத பூஜையான நேற்று காலை துர்க்கா பூஜை நடந்தது. மேற்கு வங்க பாரம்பரிய தோலிசைக் கருவியான துணிச்சி இசைத்தல், நெருப்பு ஆட்டம் நடந்தன. வடமாநில இனிப்புகள் வழங்கப்பட்டன. விழா நிறைவு நாளான நாளை (அக்., 23) காளி உட்பட சாமி சிலைகள் வைகையில் கரைக்கின்றனர்.