போடி: போடியில் தாய்ஸ்தலம் சவுடாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். சாமுண்டீஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. குலாலர் பாளையம் காளியம்மன் கோயிலில் நவராத்திரி இசை இலக்கிய விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலத்தெரு சவுடம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.