பதிவு செய்த நாள்
23
அக்
2015
12:10
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு நகரின் பிரசித்தி பெற்ற, தசரா பண்டிகையை ஒட்டி, ஜம்பு சவாரி இன்று நடக்கிறது. இன்று மதியம், 12:07 மணி முதல் 12:21 வரை, சம்பிரதாயப்படி, நந்தி கொடிக்கம்பத்துக்கு பூஜை செய்து, ஜம்பு சவாரியை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். அரச குடும்பத்தின் வாரிசு யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.ஜம்பு சவாரியை காண, அரண்மனை வளாகத்தில், 15 ஆயிரம் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஜம்பு சவாரியில், சாமுண்டி தேவியின் விக்கிரகம் வைக்கப்படும், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்த படி, அர்ஜுனா என பெயரிடப்பட்டுள்ள யானை தலைமையில், 5.5 கி.மீ., துாரம் யானைகள் பேரணி நடைபெறும். பன்னி மண்டபத்தை அடையும் பேரணியில், போலீஸ் அணி வகுப்பு நடைபெறும். கவர்னர் வஜுபாய் வாலா, அணி வகுப்பு மரியாதையை ஏற்பார். இம்முறை விழா எளிமையாக கொண்டாடுவதால், லேசர் ஷோ, பட்டாசு வெடிப்பது போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற படி, பைக் சாகசம், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகள் வழக்கம் போல நடைபெறும்.