Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மண்ணச்சநல்லூரில் கழுவேற்ற திருவிழா கரூர் வெ.மலையில் ஆடிக்கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் வயலூரில் மயில் வாகனத்தில் ஸ்வாமி உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2011
12:07

திருச்சி: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. வயலூர் முருகன் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிருத்திகை எனப்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் முருகப்பெருமான். சூரபத்மனை அழிப்பதுக்காக, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய ஆறு தீப்பொறிகளில் தோன்றிய கார்த்திகேயனை, ஆறு கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர். கார்த்திகை பெண்களின் பெருமையை போற்றும் வகையில் கிருத்திகை (கார்த்திகை) விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் பிரசித்தி பெற்றது. ஆடிக்கிருத்திகை அன்று, தடைகளை தகர்த்தெறியும் முருகனுக்கு, காவடிகள், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் செய்வது முருகப் பக்தர்களின் வழக்கம். ஆடிக்கிருத்திகையொட்டி, திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. குமார வயலூர் முருகன் கோவிலில் நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 11 மணிக்கு பால் காவடி, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் சிங்கார வடிவேலர் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு 10.30 மணிக்கு பிரயாச்சித்த அபிஷேகம், அர்த்த ஜாம பூஜை நடந்தது. அதுவரை நடை திறந்திருந்தது. பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவானைக்கோவில் பாலதண்டாயுதபாணி, மேலக்கொண்டயம்பேட்டை சுக்ரான் கோவில், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் உள்ளிட்ட திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது.விராலிமலை முருகன் கோவில், புதுக்கோட்டை குமரமலை முருகன் கோவில் உள்ளிட்ட சிறப்புமிக்க மலைக்கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar