பதிவு செய்த நாள்
26
அக்
2015
10:10
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் கோவிலில் ஐம்பொன் நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில் பழமைவாய்ந்த பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்÷ காவில் பழமையானதால், இடித்து விட்டு புதிய கோவில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவில் கர்ப்பகிரகத்தி லிருந்த கைலாசநாதர் சுவாமி சிலையை பாலாயணம் செய்து, மூடி வைத்துள்ளனர். பொதுமக்கள் கோவிலுக்கு வந்து வழிபடும் வகையில், ஐம்பொன்னால் ஆன புதிய நடராஜர் சிலையை, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், கோவிலுக்கு வழங்கினார். புதிய ஐம்பொன் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, நடராஜருக்கு, வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர், ஏனாதிநாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள், சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.