சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதற்குரிய பரிகாரம் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2015 12:10
27 நட்சத்திரங்களுக்கு 12 ராசிகள் உள்ளன. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறாரோ, அதற்கான ராசியே பிறந்த ராசி எனப்படுகிறது. பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில், சந்திரன் இருப்பதே சந்திராஷ்டமம் என ஜோதிடம் கூறுகிறது. அஷ்டமம் என்றால் எட்டாவது என்று பொருள். அன்றைய தினம் தேவையற்ற கோபம், வீண் வாக்குவாதம், சண்டை போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு அமைதி காப்பதே சிறந்த பரிகாரம். அன்று புதிய முயற்சியில் ஈடுபடும் சூழல் வந்தால், விநாயகருக்கு தயிர் அபிஷேகம் செய்த பிறகு பணியைத் துவங்கலாம்.