Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் ஆடிக்கிருத்திகை ... பாபநாசம் சொரிமுத்தையனார் கோயில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்! பாபநாசம் சொரிமுத்தையனார் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு கெடுபிடி: பக்தர்கள் செல்ல தடை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2011
11:07

திருவனந்தபுரம்:பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகள் அருகே உள்ள ஒற்றைக்கால் மண்டபத்திற்கு, பக்தர்கள் செல்ல தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பாதாள அறைகளைத் திறந்து அங்குள்ளவற்றை கண்டறிய, நீதிபதி ராஜன் தலைமையில், ஏழு பேர் கொண்ட கமிட்டியை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அக்கமிட்டி ஜூன் மாதம் 27ம் தேதி முதல் இம்மாதம் 5ம் தேதி வரை கோவிலில் ஆய்வு மேற்கொண்டது. இதில், அங்குள்ள ஆறு அறைகளில் ஐந்து அறைகளை மட்டுமே திறந்து பார்த்த அக்கமிட்டியினருக்கு, அங்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் பொக்கிஷங்கள் இருப்பது தெரிந்தது. இந்நிலையில், ஆறாவது அறையை (பி அறை) திறக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. தொடர்ந்து தற்போது, அவ்வறைகளில் உள்ளவற்றை மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கொண்ட கமிட்டியை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது.இக்கமிட்டியின் தலைவராக, தேசிய அருங்காட்சியக இயக்குனர் டாக்டர் ஆனந்த்போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவிலில் தற்போது பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வதையடுத்து, கோவிலுக்கு போலீஸ் எஸ்.பி., அனில் குமார் தலைமையில், மூன்றடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, அடிக்கடி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில், கோவிலின் பாதாள அறைகள் இருக்கும் பகுதி என சந்தேகிக்கப்படும் தெற்கு கோபுரம் வழியாக, பக்தர்கள் அங்குள்ள ஒற்றைக்கால் மண்டபத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில், பக்தர்கள் இனிமேல் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர்.தெற்கு வாசல் வழியாக அனுமதி நிறுத்தப்படும். அவ்வழியே கோவில் ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் தவிர, வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. கோவில் ஆசாரங்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு இல்லாத நிலையில் அனுமதி வழங்குவது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் அரிகுமார் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், போலீஸ் எஸ்.பி., அனில்குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு போலீசாருக்கு கோவில் ஆசாரங்கள் குறித்து ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், கோவில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல்சாந்தியிடம் பரிசோதனை:பத்மநாப சுவாமி கோவில் பத்மகுளத்தில், கோவில் பணிகளுக்காக குளித்து விட்டு கோவிலுக்கு வந்த, மேல் சாந்தி நம்பி என்பவரை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை சோதனையிட்டனர். கோவில் குளத்தில் குளித்து விட்டு ஆசாரமாக கோவிலுக்குள் நுழைந்த அவரை, போலீசார் தொட்டு களங்கப்படுத்தி விட்டதாக பலரும் புகார் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஆசாரப்படி வேட்டி (முண்டு) அணிந்திருந்ததில், ஒரு பகுதி வீங்கி பெரிதாக காணப்பட்டது தான் அவரை போலீசார் சோதனையிட காரணமாகி விட்டதாக, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.இதுபோன்ற பிரச்னைகள் வருங்காலத்தில் ஏற்படாதவண்ணம் தடுக்கவே, கோவில் அதிகாரிகளும், பாதுகாப்பு போலீசாரும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.முதல்வர் பேட்டி"பத்மநாப சுவாமி கோவிலில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த அறிக்கையை போலீசார், மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையை பரிசீலித்த பின், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். பொக்கிஷங்கள் உள்ள அறைகளில் சென்சார் கருவிகளை பொருத்தவும், பாதாள அறை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பாதாள அறையை பயன்படுத்துவோர் கைரேகை பதிவு செய்யும் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என, போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar