Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சையில் 1000 கிலோ அரிசியில் ... தி.மலை அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் கிரிவலம்! தி.மலை அண்ணாமலையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 3,500 கிலோ சாதத்தில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2015
06:10

பெரம்பலுார்:  அரியலுார் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 3,500 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அருள்பெற்றனர்.

Default Image
Next News

அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் தனது ஆட்சி காலத்தில் (கி.பி. 1012-1044) கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான அன்னாபிஷேம் சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி கடந்த 25ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கணபதி ேஹாமம், அருள்மிகு கணக்க  விநாயகருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, 26ம் தேதி 9 மணிக்கு அருள்மிகு பிரகதீஸ்வரருக்கு ருத்ரேேஹாமம், மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. விழாவின் மு்க்கிய நிகழ்வாக 3,500 கிலோ பச்சரிசியால் சாதம் சமைத்து காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அருள்மிகு பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், 5.50 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது.லிங்கத்தின்மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் 156 சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு சாதம் சமைத்து அன்னாபிஷேகம் செய்தனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar