பதிவு செய்த நாள்
28
அக்
2015
11:10
திருவண்ணாமலை: திருவண்ணமலை அடுத்த, ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள, உண்டியல் மூலம், ரூ. 8.83 லட்சம் வசூலானது. திருவண்ணாமலை அடுத்த, ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை பிரம்மோற்சவம், தொடர்ந்து புரட்டாசி மாத பிரம்மோற்சவம் நடந்தது. பெரணமல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். மேலும் உண்டியல் காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோபாலசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் மனோகரன், செயல் அலுவலர் உமேஷ்குமார், ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், ரூ. 8 லட்சத்து, 83 ஆயிரத்து, 166 ரூபாய் மற்றும், 13 பவுன் நகை, 9 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.