பதிவு செய்த நாள்
29
அக்
2015
11:10
கொள்ளேகால்: சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு, மஹாளய அமாவாசை தினத்தன்று, ஒரே நாளில், 82.48 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.நவராத்திரியை முன்னிட்டு, தொடர் விடுமுறையால், மலை மஹாதேஸ்வரா மலைக்கோவிலுக்கு, அதிக எண்ணிக்கையில் வெளிமாநில பக்தர்கள் குவிந்தனர். நவராத்திரி நாட்களில், 54.94 லட்சம் ரூபாயும், குறிப்பாக, மஹாளய அமாவாசை தினத்தன்று மட்டும், 82.48 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.தங்க ரத உற்சவம் உட்பட மற்ற உற்சவம் மூலமாக, 23.40 லட்சம் ரூபாயும்; லட்டு பிரசாதம் விற்பனை, 9.15 லட்சம்; சிறப்பு தரிசனம், 4.12 லட்சம்; பக்தர்களுக்கு அறை வாடகை, 4.12 லட்சம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. உணவு, குடிநீர், தங்கு மிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு, சிறப்பு நுழைவாயில் மூலம், சுவாமி தரிசனம் மற்றும் மஹாளய அமாவாசை தினத்தன்று, கே.எஸ்.ஆர்.டி.சி., 100 கூடுதல் பஸ்களை இயக்கியது போன்ற வசதிகளே, பக்தர்களின் வருகை அதிகரிக்க காரணம்.இந்நிலையில், தீபாவளிக்கு பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.