பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிேஷக விழா நடந்தது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், தேவம்பாடிவலசை அடுத்து, விவசாய நிலங்களின் மத்தியில் அமைந்துள்ளது அம்மணீஸ்வரர் கோவில். இங்கு வேறெங்கும் இல்லாத வகையில், சிவபெருமான் லிங்க வடிவில் இல்லாமல், தியான கோலத்தில், கங்கா பார்வதி சமேதராக காட்சியளிக்கிறார். இக்கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். இந்த கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிேஷக விழா நடந்தது. சிவபெருமான் மற்றும் கங்கா பார்வதிக்கு அபிேஷக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, பச்சரிசி அன்னத்தால் சிவனுக்கு அபிேஷகம் செய்து, திருமேனி முழுக்க அலங்காரம் செய்யப்பட்டது.