அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை, வளத்தி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இரவு 7:00 மணிக்கு அகத்தீஸ்வரருக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்து மகா அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது. இதே போல் வளத்தி மங்காளம்பிகை உடனுறை மருதீஸ்வரர் கோவிலிலும் மருதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.