1. வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைத்த பின் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. பொதுவாக, எல்லா நாட்களிலும், விளக்கேற்றிய பின் யாரு க்கும் சுண்ணாம்பு, உறை மோர் ஆகியவை கொடுக்கக்கூடாது.
2. வீட்டில் உள்ள ஆண்கள், அதிகாலையில் வெளியூருக்குச் செல்ல புறப்பட்டால் அதற்கு முன்னதாகவே வாசல் தெளித்து விட வேண்டும். அவர்கள் சென்ற பிறகு தெளிக்கக் கூடாது.
3. ஆண்கள் வெளியூர் சென்றபின் தலைக்கு குளிப்பதோ வீடு கழுவி விடுவதோ ஆகாது.