பதிவு செய்த நாள்
30
அக்
2015
10:10
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு, ஜன., 20ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், 2000 பிப்., 10ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின்,ஆகம விதிப்படி 2012ல் கும்பாபிஷேகம் நடந்திருக்கவேண்டும். திருப்பதிக்கு நிகராக ஆண்டாள் கோவிலிலும் விமானகோபுரத்தை தங்ககோபுரமாக மாற்றியமைத்து, அதன்பின், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யபட்டது. இதையடுத்து, ஆண்டாள் மற்றும் வடபத்ரசயனர் கோவில்களில் திருப்பணிகள் நடந்தன.தங்ககோபுர பணிக்கு,வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால், வடபத்ரசயனர் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மே 22ல் கும்பாபிஷேகம் நடந்தது.இதன்பின், தங்ககோபுரம் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தபட்டன. 76 கிலோ தங்கம் நன்கொடையாக பெறப்பட்டு பணிகளும் நடந்து வந்தன. தற்போது, பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில், 2016 ஜன., 20ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோபுரத்தில் தங்க கவசங்கள் பொருத்தும்பணி நவ.,,18ல் துவங்க உள்ளது.