பதிவு செய்த நாள்
30
அக்
2015
10:10
பேரூர்: மருதமலை கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு, முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கோவையில் பழமையான கோவில்களில், மருதமலை முருகன் கோவிலும் ஒன்று. இங்கு, ஒவ்வொரு மாதமும், கிருத்திகை நிகழ்வு மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபி ஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின், 11:30 மணியளவில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். பின், மதியம், 12:00 மணியளவில் உச்சி கால பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடவுள் அருள் பெற்றனர்.