பதிவு செய்த நாள்
30
அக்
2015
11:10
உடுமலை: கம்பாலபட்டி கெண்டேரியம்மன், மல்லதாத்தன் கோவில், முதலாமாண்டு உற்சவ விழா, நாளை நடக்கிறது. உடுமலை – ஆனைமலை ÷ ராட்டில் உள்ள கம்பாலபட்டியில் அமைந்துள்ளது, கெண்டேரியம்மன், மல்லதாத்தன் கோவில். கோவில் கட்டி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, முதலாமாண்டு உற்சவ விழா, இன்று மாலை, 6:00 மணிக்கு, விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த கலசங்கள் எடுத்து வருதலுடன் துவ ங்குகிறது. இரவு, 7:30 மணிக்கு கணபதி பூஜை, திக்பாலகர் பூஜை, உள்மாண்ட பலி பூஜை, யாகசாலை பிரவேசம், நவகிரக பூஜை, கெண்டேரியம்மன் லட்சுமி – குபேர பூஜைகள் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு தேவராட்டமும், 9:00 மணி முதல், இரண்டாம் கால வேள்வி பூஜை, கணபதி மூலமந் திரம், சுவாமிகளுக்கு மகாமந்திர திரவிய பூஜையும் நடக்கிறது. நாளை அதிகாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை, சிவன், விஷ்ணு, பி ரம்மா மூலமந்திரமும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.