விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு புவனேஸ்வரர் , புவனேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து புவனேஸ்வரர் அன்னத்தாலும், காய்கறி பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, பூஜை நடந்தது. பின், அன்னத்தை கலைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை ரவி குருக்கள், வேதாத்திரி ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி <உள்ளிட்டோர் செய்திருந்தனர்.