பதிவு செய்த நாள்
31
அக்
2015
11:10
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், ஆவிகள் தினம் பரவசமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் அறுவடை தினத்தை தைப்பொங்கலாக கொண்டாடுவதைப்போன்று, அறுவடை தினத்தை ஆவிகள் தினமாக அனுசரித்தனர். சிலர், இந்த தினத்தில் ஆவிகளுக்கும் நமக்கும் இடையே உள்ள ஒரு சுவர் உடைக்கப்பட்டு, வெளிச்சம் ஏற்படுவதாக கருதுகின்றனர். ஆவிகள் தினத்தில் பல்வேறு உருவங்களில் உடைகள் அணிந்து, பரவசப்படுத்துகின்றனர். இவை வண்ண உடைகளாக இல்லாமல், கருப்பு வெள்ளையாக இருக்கும். இந்த ஆவிகள் தினம் பற்றி பள்ளிகள் குழந்தைகள் அறிவதற்காக, கோவை சிட்ராவில் உள்ள பார்க் குளோபல் பள்ளியில், ஹாலோவின் டே நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பு உடையில், முகமூடிகளை அணிந்து மகிழ்வோடு கொண்டாடினர். சிறு குழந்தைகள் ஆவிகளின் பயத்தை போக்கும் விதமாகவும், இந்த நாளை அனுசரிக்கின்றனர். பேய்கள் மாயை என்ற உணர்வை, குழந்தைகளுக்கு இது உணர்த்து வதாக இருந்தது.