பதிவு செய்த நாள்
31
அக்
2015
11:10
சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா, வரும், நவ., 12 ம்தேதி தொடங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது. காக்க... காக்க... என தொடங்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலம், சென்னிமலை, சுப்பிரமணிய ஸ்வாமி கோவில். இங்கு கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான, விழா, வரும் நவ., 12ம் தேதி துவங்கி, 17 ம்தேதி வரை ஆறு நாட்களும் நடைபெறுகிறது. 17ம் தேதி இரவு உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளுவார். பின்னர், சூரசம்ஹாரவிழா நிகழ்ச்சி சென்னிமலை நான்கு ரத வீதிகளில் நடைபெறும், இதில் மேற்கு ரத வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதமும்,தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்ததும், முருகப்பெருமான், வள்ளி ,தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளுவார். 18 ம்தேதி புதன்கிழமை காலை, 11 மணிக்கு, முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் திருமணவிழா நடைபெறும்.