பதிவு செய்த நாள்
31
அக்
2015
11:10
ப.வேலூர்: ஜேடர்பாளையம் பகவதியம்மன் கோவிலில், வரும், நவம்பர், 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. ப.வேலூர் அடுத்த, ஜேடர்பாளையம் பஞ்சமுக விநாயகர், பகவதியம்மன், பெரியகாண்டியம்மன், கன்னிமார் மற்றும் துர்கையம்மன் கோவில்களில், வரும், நவம்பர், 2ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக, இன்று (நவ., 31) முதல், காவிரியாற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்தல், கோபுர கலசம் வைத்தல், தீபாரதனை, யந்திரம் வைத்து மருந்து சாத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.