கோத்தகிரி: கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சக்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்தது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில், விநாயகர் கோவில் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம், 10ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் உபயதாரர்கள் சார்பில், காலை, 7:00 மணிமுதல், இரவு 7:00 மணிவரை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கடந்த, 48 நாட்களாக நடந்த மண்டல பூஜை நிறைவடைந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சக்தி விநாயகரை தரிசித்தனர்.