கோவை: உலக முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தினமாகவும், சகல ஆத்துமாக்களின் (ஆல் சோல்ஸ்) தினமாகவும் அனுசரிக்கின்றனர். இன்று காலை முதல் இரவு வரை ரோமன் கத்தோலிக்க, பிராட்டஸ்டன்டு, லுத்தரன் உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கல்லறைகளுக்கு சென்று இறந்தோரை நினைவு கூர்ந்து வருவர். அனைத்து பிரிவு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடக்கிறது. நேற்று, சகல பரிசுத்தவான்களின் (ஆல் செயின்ட்ஸ்) தினமாகவும் நினைவு கூர்ந்தனர். குறிப்பாக, கத்தோலிக்க பிரிவில் மரித்த ஆலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கல்லறைகளில் விசேஷ வழிபாடு நடந்தது.