செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2015 09:11
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பக வல்லியம்மன் கோயில் ஐப்பசி திருவிழா தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில்பட்டி செண்பக வல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதுஅம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. காலை 9.30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார் பக்தர்கள் வடம் பிடித்து, கர கோஷத்துடன் தேர் இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் காலை 11.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பச்சையப்பன், உதவி கமிஷனர் அன்னக்கொடி, மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.